கிணத்தை காணோம் போஸ்டரால் சினிமா பாணியில் அலப்பறை

கிணத்தை காணோம் போஸ்டரால் சினிமா பாணியில் அலப்பறை

கிணற்றை காணோம் என, சினிமா பாணியில், உத்திரமேரூரில் ஒட்டியுள்ள போஸ்டரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


கிணற்றை காணோம் என, சினிமா பாணியில், உத்திரமேரூரில் ஒட்டியுள்ள போஸ்டரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், காரனை ஊராட்சி, நடுபட்டு கிராமத்தில் பஜனை கோவில் தெருவில் 50 ஆண்டுகளாக குடிநீர் ஆதாரமாக இருந்த பொது கிணற்றை சில தினங்களுக்கு முன், அதே கிராமத்தை சேர்ந்த சிலர் இரவோடு இரவாக இடித்து, கிணறு இருந்த இடம் தெரியாமல் துார்த்து மூடிவிட்டனர். இதையடுத்து, அப்பகுதியினர் கிணற்றை இடித்து துார்த்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், மீண்டும் அதே இடத்தில் கிணறு அமைக்க வேண்டும் என, காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். இருப்பினும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், கிராம மக்கள், தங்களது எதிர்ப்பை தெரிவித்து, அதிகாரிகளை கலாய்க்கும் வகையில், சினிமா பாணியில், 'கிணத்தை காணோம் சார்!' என, உத்திரமேரூர் வட்டாரத்தில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில், ஒரு படத்தில் வரும், கிணத்தை காணோம் என்ற காட்சியுடன், உத்திரமேரூர் ஒன்றியம், காரணை ஊராட்சி, நடுப்பட்டு கிராமத்தில், கிணத்தை காணோம் சார்! அய்யய்யோ என்ற வாசகத்துடன், கிராமத்தில் முன் கிணறு இருந்த இடம், தற்போது கிணறு இல்லாத இடத்தின் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது. கிணற்றை காணோம் என, சினிமா பாணியில், உத்திரமேரூரில் ஒட்டியுள்ள போஸ்டரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story