கோவையில் ஐ.டி.பெண் ஊழியரிடம் தவறாக நடக்க முயன்ற கிளீனர் கைது

கோவையில் ஐ.டி.பெண் ஊழியரிடம் தவறாக நடக்க முயன்ற கிளீனர் கைது
கைது செய்யப்பட்டவர் 
கோவையில் ஐ.டி.பெண் ஊழியரிடம் தவறாக நடக்க முயன்ற கிளீனர் கைது செய்யப்பட்டார்.

விருதுநகரில் இருந்து கோவைக்கு வந்த ஆம்னி பேருந்தில் சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றும் கண்மணி (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) என்ற பெண் ஊழியரும் பயணம் செய்த நிலையில் பேருந்து கோவை நோக்கி வந்துள்ளது.

காந்திபுரம் மத்திய சிறைச் சாலை அருகில் ரவுண்டானா பகுதியில் பயணிகள் இறங்கி கொண்டு இருந்தனர். அப்போது கிளீனர் ஆக பணியாற்றி வரும் மாயவரம் மஞ்சில்குடி பகுதியைச் சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் (41) என்பவர் அந்த பெண்ணிடம் தவறாக நடந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து கண்மணி தனது கணவருக்கு தகவல் அளித்த நிலையில் கிளீனர் சுபாஷ் சந்திரபோஸை கணவர் மற்றும் சக பயணிகள் தட்டி கேட்டதாக கூறப்படுகிறது.

அப்போது அவர் இறங்க உதவி செய்வதற்காகத் தான் கையை நீட்டியதாக கூறியுள்ளார்.இதனை ஏற்க மறுத்தவர்கள் அவரை சத்தம் போட்டுள்ளனர். இது குறித்து கண்மணி காட்டூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த உதவி ஆய்வாளர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஆம்னி பேருந்து கிளீனர் சுபாஷ் சந்திரபோசை கைது செய்தனர்.

Tags

Next Story