குடியிருப்பு பகுதியில் புகுந்த நாகப்பாம்பு

சங்ககிரியில் குடியிருப்பு பகுதியில் புகுந்து அச்சத்தை ஏற்படுத்திய நாகப்பாம்பை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.
சசங்ககிரி நகர் பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்களை நாகப்பாம்பு ஒன்று அச்சுறுத்தி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் சங்ககிரி தீயணைப்பு துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 5 அடி நீளம் கொண்ட நாகப் பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர் . சங்ககிரி குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நாகப்பாம்பை தீயணைப்புத் துறை வீரர்கள் லாபகமாக பிடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story