ஒரு ஊரையே மிரட்டி வந்த நாகப்பாம்பு
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட தேவூர் அருகே புதுப்பாளையம் பகுதியில் குடியிருப்பு வீடுகளில் 3 நாட்களாக மக்களை பார்த்து படம் எடுத்து பயமுறுத்தி வந்த நாகபாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து சென்று வனத்தில் விடப்பட்டதால் பரபரப்பு.
பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பது பலமொழி அதுபோல் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட தேவூர் அருகே புதுப்பாளையம் ஊருக்குள் சுமார் 5 அடி நீளமுள்ள நாகபாம்பு வீடுகளுக்கு வீடு மாறி சென்று படம் எடுத்து சிறுவர், சிறுமிகள் என அனைவரும் பார்த்து பயத்தில் ஒரு ஊரே நடுநடுங்கி உள்ளனர். மேலும் இரவு நேரத்தில் வீடுகளில் புகுந்து விடுமோ என பயத்தில் வசித்து வந்தனர்.
இதனையடுத்து அப்பகுதி மக்கள் சங்ககிரி தீயணைப்பு துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வீட்டுக்கு முன்பு உலா வந்த நாகபாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.