சிறுதானிய வாரவிழாவில் பங்கேற்ற ஆட்சியர்

சிறுதானிய வாரவிழாவில் பங்கேற்ற ஆட்சியர்

 சிறுதானிய வாரவிழா

அரியலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் சிறுதானிய உணவு திருவிழா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா கலந்து கொண்டு சிறுதானிய உணவு பொருட்கள் காட்சிபடுத்தபட்டுள்ளதை பார்வையிட்டார். மேலும் வேளாண்மை துறை சார்பில் சிறுதானிய விதைகள் மற்றும் பயிர்கள் காட்சிபடுத்தபட்டு இருந்ததையும் பார்வையிட்டார். மேலும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் மகளிர் சுயஉதவி குழு சார்பில் காய்கறிகள் மற்றும் ஊட்டசத்து பொருட்களுக்கான அரங்குகளும் அமைக்கபட்டிருந்தது. இதில் மகளிர் திட்டம், வேளாண்மை துறை, குழந்தைகள் வளர்ச்சிகள் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Tags

Next Story