மக்களுடன் நடை பயிற்சி மேற்கொண்ட கலெக்டர் !

மக்களுடன் நடை பயிற்சி மேற்கொண்ட கலெக்டர்  !

கலெக்டர் 

நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தில் மக்களுடன் கலெக்டர் நடை பயிற்சி மேற்கொண்டார்.

தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் நடப்போம் நலம் பெறுவோம் என்றதிட்டத்தின் கீழ் 8கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைப்பயிற்சி பெரம்பலூரில் நேற்று நடந்தது. இந்த திட்டத்தில் ஒவ்வொருவாரமும் ஞாயிற் றுக்கிழமை ஒவ்வொரு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்கும் வகையில் நிகழ்வை நடத்த வேண்டும் என்று திட்டமி டப்பட்டபடி, நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டநடைப்ப யிற்சியை பெரம்பலூர் பாலக்கரையில் தொடங்கி வைத்த மாவட்ட கலெக்டர் கற்பகம், மக்களோடு மக்களாக நடைப்ப யிற்சி மேற்கொண்டார்.

இதில் சிறுவர் அறிவியல் பூங்கா, மாவட்ட விளையாட்டு அரங்கம், கேந்திர வித்யாலயா பள்ளி- விளாமுத்தூர் சாலை வழியாக சென்று கலெக்டரின் முகாம் அலுவலக சாலை, பாலக்கரை வளைவு வழியாக, தேசிய நெடுஞ்சாலை வளைவு சென்று, பின்னர் சிறுவர் பூங்காவிற்கு வந்தனர். முன்னதாக கலெக்டர் கற்பகம் மருத் துவ முகாமினை பார்வையிட்டு தொடர்ந்து நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு பாராட்டு சான்றிதழையும், பரிசுக ளையும் வழங்கினார். பின்னர் நடைப்பயிற்சி மேற்கொள்ப வர்களுக்காகசுகாதாரதுறையின் சார்பில் வைக்கப்பட்டிருந்த ஓ.ஆர்.எஸ். கரைசலை அருந்தினார். இதில் மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் பிரதாப்குமார், பெரம்பலூர் சரகபோலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) வளவன், நடைப்பயிற்சியா ளர்கள் கலந்து கொண்டனர்

Tags

Next Story