கரும்பு வயலுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்த ஆட்சியர்

கரும்பு வயலுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்த ஆட்சியர்

கரும்பு வயலுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்த ஆட்சியர்

கரும்பு வயலுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்த ஆட்சியர்
தமிழ்நாடு அரசு அறிவிப்பின் படி பெரம்பலூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பில் தரமான கரும்புகளை வழங்கும் வகையில், அதனை கொள்முதல் செய்யப்படுகிறதா என்று ஆட்சியர் நேரடியாக கரும்பு வயலுக்கு சென்று ஆய்வு செய்தார் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளபடி பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி பெரம்பலூர் மாவட்டத்தில் தீவிர படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தொகுப்பில் இடம் பெற உள்ள கரும்பு தரமானதாக கொள்முதல் செய்யப்படுகிறதா? என்பதனை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம் நேரில் கரும்பு கொள்முதல் செய்யப்படும் வயலுக்கே சென்று ஆய்வு செய்தார். அப்போது தரமான, சரியான நீளம் உள்ள, அதே சமயம் திரட்ச்சியான கரும்புகளை மட்டுமே கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் கற்பகம், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக தரமான கரும்புகளை கொள்முதல் செய்யும் வகையில் இன்று ஆய்வு செய்யப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கரும்பு விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து தரமான கரும்பு கொள்முதல் செய்யப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் 1,90,912 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களில் மத்திய, மாநில அரசு அலுவலர்கள், வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை அட்டைக்காரர்கள், பொருள் இல்லா அட்டைதார்கள் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர் மற்றும் அரசு அறிவித்துள்ளவர்களை தவிர்த்து மீதமுள்ள அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுதொகுப்பு வழங்கப்படவுள்ளது. அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 1,72,582 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு வீடாக சென்று வழங்கப்பட்டு வருகிறது என்றார். ஆய்வின் போது கூட்டுறவுத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் கரும்பு விவசாயிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story