லாரி மீது கல்லூரி பேருந்து மோதி விபத்து !

லாரி மீது கல்லூரி பேருந்து மோதி விபத்து !

விபத்து

பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கல்லூரி பேருந்து மோதி விபத்து ஓட்டுநர் உட்பட நான்கு மாணவிகள் படுகாயம், போலீசார் விசாரணை.

பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கல்லூரி பேருந்து மோதி விபத்து ஓட்டுநர் உட்பட நான்கு மாணவிகள் படுகாயம், போலீசார் விசாரணை.

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் பகுதியில் தனியார் ( ஸ்ரீ ராமகிருஸ்ணா ) பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது, இந்நிலையில் பல்வேறு ஊர்களில் இருந்து கல்லூரி பயிலும் மாணவ மாணவிகளை அழைத்துச் செல்வதற்கு கல்லூரி பேருந்து இயக்கப்பட்டு வரும் நிலையில் ஏப்ரல் 17ஆம் தேதி இன்று மாலை கல்லூரி முடிந்து, மாணவ மாணவிகளை ஏற்றிக் கொண்டு திட்டக்குடி நோக்கி சென்ற கல்லூரி பேருந்து, திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாலிகண்டபுரம் அருகே, சாலையின் நடுவே உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த டேங்கர் லாரி மீது, எதிர்பாராத விதமாக மோதி விபத்துக் குள்ளானது.

இதில் பேருந்து ஓட்டுநர் வடக்கலூர் கிராமத்தை சேர்ந்த சோலைராஜ - 35 காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு படுகாயத்துடன், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், மேலும் கல்லூரி பேருந்தில் பயணம் செய்த மாணவிகள், 4 பேர் எலும்பு முறிவு உள்ளிட்ட பலத்த காயம் ஏற்பட்டு, பெரம்பலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்துக்குள்ளான பேருந்தில் பயணம் செய்த மாணவ மாணவிகளை மீட்டு, பத்திரமாக அனுப்பி வைத்தனர், மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை செய்ததில், இரண்டு கல்லூரி பேருந்துகள் போட்டி போட்டுக் கொண்டு தேசிய நெடுஞ்சாலைகள் சென்றதால் எதிர்பாராத விதமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிய வருகிறது.

மேலும் இந்த விபத்தில் காயம் ஏற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மிகுந்த அச்சத்தோடு சம்பவ இடத்திற்கும் மருத்துவமனைக்கும் கூடியதால் பெரும்பரபரப்பு நிலவியது.

Tags

Next Story