தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்ட கல்லூரி மாணவன் !

X
கல்லூரி மாணவன் மரணம்
நத்தம் அருகே மாந்தோப்பில் கல்லூரி மாணவன் தூக்கில் தொங்கினார். நத்தம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நத்தம் அருகே கல்வேலிபட்டி பகுதியில் உள்ள தனியார் மாந்தோப்பில் உள்ள மரத்தில் தூக்கு மாட்டிய நிலையில் ஆண் சடலம் பிணமாக தொங்கிய நிலையில் இருந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த நத்தம் காவல் ஆய்வாளர் தங்கமுனிய உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்ததில் நத்தம் அருகே எல். வலையபட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மகன் சசிக்குமார் (22) என்பது தெரியவந்தது.அருகில் அவரது பேக் இருந்த நிலையில் அவரது கைப்பேசி கைபற்றப்பட்டது. அவர் புதன்கிழமை இரவு 8 மணிக்கு சசிக்குமார் விடுதியிலிருந்து அவரது அப்பாவிற்கு போன் செய்து கல்லூரி கட்டணம் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.இந்நிலையில் காலையில் பணம் அனுப்பி வைத்த நிலையில் அவர் நத்தம் அருகே மாந்தோப்பில் தூக்கில் பிணமாக தொங்கியது கேட்டறிந்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
Next Story
