சிங்கம்புணரி அருகே இடிந்து விழும் நிலையில் சமுதாயக்கூடம்

சிங்கம்புணரி அருகே இடிந்து விழும் நிலையில் சமுதாயக்கூடம்

சேதமடைந்துள்ள கட்டிடம் 

சிங்கம்புணரி அருகே சமுதாய கூட கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் கிராம மக்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எடுத்துள்ளனர்
சிங்கம்புணரி அருகே பாழடைந்த சமுதாயக்கூட கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இவ்வொன்றியத்தில் எருமைப்பட்டி ஊராட்சியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு சமுதாய கூட கட்டடம் கட்டப்பட்டது. கிராமத்தில் திருமணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளும், அரசுத்துறை சார்ந்த விழாக்களும் இக்கட்டடத்தில் தான் நடைபெற்று வந்தது. தற்போது கட்டடத்தின் சுவர்களிலும், கூரையிலும் வெடிப்பு ஏற்பட்டு பாழடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் உள்ளது. ஆனாலும் கிராமத்தில் வேறு சமுதாயக்கூடம் இல்லாததால் கிராம மக்கள் ஆபத்தை உணராமல் இக்கட்டடத்திலேயே நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். பாழடைந்த சமுதாயக் கூட கட்டடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டித் தர அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்

Tags

Next Story