கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் இரங்கல் கூட்டம்

X
நாகப்பட்டினம் கம்யூனிஸ்ட் எம்.பி. மரணத்திற்கு திண்டுக்கல் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் இரங்கல் கூட்டம் நடந்தது.
நாகப்பட்டினம் கம்யூனிஸ்ட் எம்.பி. மரணத்திற்கு திண்டுக்கல் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் இரங்கல் கூட்டம் நடந்தது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினரும், நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி எம்பியுமான தோழர். எம். செல்வராஜ் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காலமானார்.அவருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திண்டுக்கல் மாவட்ட குழுவின் சார்பாக கட்சி அலுவலகத்தின் முன்பு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் ஏ பி. மணிகண்டன், மாவட்ட குழு உறுப்பினர்களும், தொழிற்சங்க நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். தோழர் எம். செல்வராஜ் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் தோழர் ஏபி மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.
Next Story
