மரத்தில் தூக்கு போட்டு கட்டிடத் தொழிலாளி தற்கொலை

மரத்தில் தூக்கு போட்டு கட்டிடத் தொழிலாளி தற்கொலை

காவல்துறை விசாரணை

இளஞ்சிறை பகுதியில் மரத்தில் தூக்குப்போட்டு கட்டிட தொழிலாளி தற்கொலை.
கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் அருகே பண்டாரவிளை இளஞ்சிறை பகுதியை சேர்ந்தவர் சலீம் கட்டிட தொழிலாளி. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர் மது அருந்திவிட்டு சரிவர வேலைக்கு செல்வதில்லை என கூறப்படுகிறது. மேலும் சலீம் தினசரி மது அருந்திவிட்டு வீட்டில் வந்து தகராறு செய்வது வழக்கம். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு சலீம் அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் அவர் இரவு தனது அறையில் தூங்கி உள்ளார் பின்னர் வீட்டின் அருகில் நிற்கும் புளியமரத்தில் சலீம் ததூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை அதிகாலையில் எழுந்து பார்த்த மனைவி அதிர்ச்சியடைந்தார். மேலும் மனைவி கதறி அழுதார். இவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர்அங்கு வந்துள்ளனர். மேலும் இது குறித்து பளுகல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சலீம் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து பளு கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story