முசிறி அருகே தேமுதிக அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
திருச்சி மாவட்டம் முசிறி அருகே தாப்பேட்டை தேமுதிக மாவட்ட அலுவலகத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் கே. எஸ். குமார் தலைமையில் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட லால்குடி, மண்ணச்சநல்லூர், துறையூர், முசிறி உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகளிடம் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றுவது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர் கே எஸ் குமார் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆணைக்கிணங்க கூட்டணி கட்சி அதிமுக பெரம்பலூர் நாடாளுமன்ற வேட்பாளர் சந்திரமோகனை அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற பாடுபட வேண்டும்.கட்சி நிர்வாகிகள் முழு ஒத்துழைப்புடன் பணியாற்ற வேண்டும் என்று பேசினார் இந்நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர்கள் பார்த்திபன், துரை, சதீஷ்குமார், சக்தி சண்முகவேல்,முசிறி நகர செயலாளர் நகர் மன்ற உறுப்பினர் சுந்தர்ராஜன்,துறையூர் நகர செயலாளர் சங்கர் ஒன்றிய கழகச் செயலாளர்கள் பாக்கியராஜ், சிவமணி,விஜயசேகரன் ஜெயராமன், சந்தோஷ்,தங்கமணி,
இளையராஜா,கருணாகரன், மற்றும் பேரூர் கழக செயலாளர்கள் தர்மராஜ், எம் கே எஸ் ராஜா, அர்ஜுனன், மகாமுனி, ஜனனி ஆறுமுகம் உள்ளிட்ட நான்கு தொகுதி மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தின் முடிவில் கலந்து கொண்ட அனைவருக்கும் தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜலிங்கம் நன்றி கூறினார்.