ஜல்லிக்கட்டு பேரவையின் கலந்தாய்வு கூட்டம்
ஜல்லிக்கட்டு பேரவையின் கலந்தாய்வு கூட்டம்
காளைகளுக்கு வழங்கும் டோக்கன் உரிமையை ஜல்லிக்கட்டு விழா குழுவினருக்கு தர வேண்டும்.ஆன்லைனில் பதிவு டோக்கன் முறையை ரத்து செய்யவேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்
திண்டுக்கல் அருகே நல்லம நாயக்கன்பட்டியில் தமிழ்நாடு பாரம்பரிய ஜல்லிக்கட்டு பேரவையின் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதற்கு மாநில தலைவர் செந்தில் தலைமை தாங்கினார்.செயலாளர் ஜெரோம் வரவேற்புரை ஆற்றினார்.இந்த கூட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டியானது காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுவது போல திண்டுக்கல் மாவட்டத்திலும் கடைபிடிக்க வேண்டும்.மாவட்ட நிர்வாகம் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு வழங்கும் டோக்கன் உரிமையை ஜல்லிக்கட்டு விழா குழுவினருக்கு தர வேண்டும்.ஆன்லைனில் பதிவு டோக்கன் முறையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story