எலக்ட்ரிக் பைக்குகளை கொண்டு சென்ற கண்டெய்னர் லாரி தீப்பற்றி எரிந்து இருசக்கர வாகனங்கள் சாம்பல்
ஓசூர் அருகே எலக்ட்ரிக் பைக்குகளை கொண்டு சென்ற கண்டெய்னர் லாரி தீப்பற்றி எரிந்ததில் 20க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த மதகொண்டப்பள்ளி என்னுமிடத்தில் ஏத்தர் நிறுவனத்தின் பேட்டரி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து 40க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை பெங்களூர் ஜே பி நகருக்கு செல்ல கண்டெய்னர் லாரியின் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். கண்டெய்னர் லாரி ஓசூர் தளி சாலை உளிவீரணபள்ளி என்னும் கிராமத்தின் அருகே சென்று கொண்டிருந்தபோது தாழ்வான பகுதியில் உள்ள மின்சார வயர் கண்டெய்னர் லாரி உரசியதால் லாரியின் மேல்புறத்தில் திடீரென தீப்பற்றியது. லாரி சாலையிலேயே நிறுத்தப்பட்டது பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைத்து தீயணைப்புத்துறையினருக்கு ஓட்டுநர் தகவல் அளித்துள்ளார். தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தாலும் லாரியில் இருந்த 20க்கும் மேற்பட்ட பேட்டரி வாகனங்கள் தீயில் எரிந்த நாசமானது. ஆனால், லாரியின் கீழ் தளத்தில் இருந்த மேலும் 20 பேட்டரி வாகனங்கள் மீட்கப்பட்டன.. கண்டெய்னர் லாரி தீப்பற்றி 20 பேட்டரி வாகனங்கள் நாசமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியது
Next Story