விருதுநகருக்கு வந்த ஊழலற்ற இந்தியா விழிப்புணர்வு முதியவர்

X
ஊழலற்ற இந்தியா விழிப்புணர்விற்காக சைக்கிளில் தேசிய கொடியுடன் டெல்லி முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் 67 வயது முதியவர் விருதுநகர் வந்தடைந்தார்.
உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சார்ந்த குலாம் சிங் என்ற 67 வயது முதியவர் . இவர் ஊழலற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும். தூய்மையான இந்தியாவை உருவாக்க வேண்டும் ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரி வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச கல்வி மற்றும் இலவச உணவு வழங்க வேண்டும் இலவச மருத்துவம் வழங்க வேண்டும் என்றால் கோரிக்கைகளை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக டெல்லியில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார். இவர் கடந்த நவம்பர் மாதம் 23ஆம் தேதி டெல்லியில் இருந்து தனது சைக்கிள் பயணத்தை துவங்கியவர் நேற்று விருதுநகர் வந்தடைந்தார். மேலும் இவர் தனது சைக்கிளில் தேசிய கொடியை கட்டியவாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தனது சைக்கிள் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்
Next Story
