விஷபாட்டிலுடன் மனு கொடுக்க வந்த தம்பதி

விஷபாட்டிலுடன் மனு கொடுக்க வந்த தம்பதி

விஷ பாட்டிலுடன் வந்த தம்பதி 

தங்களது சொத்தை அபகரிப்பு செய்ய முயற்சி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி விஷ பாட்டில் மற்றும் மண்ணெண்ணெய் கேனுடன் ஆட்சியர் அலுவகத்திற்கு வந்த தம்பதியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் ஜாகீர் சின்னமாபாளையம் கல்யாணசுந்தரம் காலனியை சேர்ந்தவர் சேட்டு. இவரது மனைவி அகிலாண்டேஸ்வரி. இவர்கள் இருவரும் நேற்று தங்களது 2 கைக்குழந்தையுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக பகுதிக்கு வந்தவுடன் திடீரென விஷபாட்டிலை பையில் இருந்து எடுத்து குடிக்க முயன்றனர். மேலும், அவர்கள் பையில் பாட்டிலில் மண்எண்ணெயையும் கொண்டு வந்திருந்தனர். இதையடுத்து அவர்கள் தற்கொலை செய்து கொள்வதாக கூறியதால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் விஷபாட்டில் மற்றும் மண்எண்ணெயை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்தனர். அப்போது, தங்களது சொத்தை அபகரிப்பு செய்ய முயற்சி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி விஷ பாட்டில் மற்றும் மண்ணெண்ணெய் கேனுடன் ஆட்சியர் அலுவகத்திற்கு வந்த தம்பதியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். என தெரிவித்தனர். பிறகு அவர்களை விசாரணைக்காக போலீசார் டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு கணவன்-மனைவியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags

Read MoreRead Less
Next Story