திருச்சியில் கொள்ளிடம் ஆற்றில் கார் கவிழ்ந்து தம்பதி உயிரிழப்பு



விபத்தில் சிக்கிய கார்
கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீநாத். இவர் மனைவியுடன் இன்று அதிகாலை திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். திருச்சி நம்பர் ஒன் டோல்கேட்டை அருகே கொள்ளிடம் ஆற்று பாலத்தில் கார் வேகமாக சென்று கொண்டிருந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
கண் இமைக்கும் நேரத்தில் கார் கொள்ளிடம் ஆற்று பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு ஆற்றில் பாய்ந்தது. இதில் கார் முற்றிலுமாக நசுங்கி சேதம் அடைந்தது. ஆற்றில் தண்ணீர் ஒடவில்லை. எனினும் காரில் பயணித்த ஸ்ரீநாத் மற்றும் அவரது மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



