சாவிலும் இணைப்பிரியாத தம்பதி
சாவிலும் இணைப்பிரியாத தம்பதி
சாவிலும் இணைப்பிரியாத தம்பதி
கெங்கவல்லி : சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லியில்உடல் நலக்குறைவால் உயிரிழந்த மனைவி, சோகத்தை தாங்க முடியாமல் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது, சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட மீனவர் தெரு பகுதியை சேர்ந்த பெயிண்டர் ராம்பிரகாஷ் இவருக்கு வெண்ணிலா என்கிற மனைவியும் சர்வேஸ் என்கிற 12 வயது மகனும் உள்ளனர், குடும்பத்தோடு சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்த நிலையில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு வந்த மனைவி வெண்ணிலாவை பல்வேறு இடங்களில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்துள்ளார், இதனிடையே புற்று நோயால் உடல் நலம் பாதிக்கப்பட்ட வெண்ணிலாவை சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வெண்ணிலா இன்று காலை திடிரென உயிரிழந்துள்ளார், இதையறிந்த கணவன் ராம்பிரகாஷ் துக்கம் தாங்க முடியாமல் மருத்துவமனையில் இருந்து வெளியே சென்றவர் வரவில்லை, இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் வெண்ணிலாவின் உடலை சொந்த ஊரான கெங்கவல்லிக்கு கொண்டு சென்று கொண்டிருந்த போது திடிரென திருச்சி இரயில்வே போலீசாரிடமிருந்து ராம்பிரகாஷ் திருச்சி இரயில் நிலையம் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தகவல் கிடைத்துள்ளது, அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மீண்டும் திருச்சிக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ராம்பிரகாஷின் உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வந்த உறவினர்கள் கணவன், மனைவி இருவரது உடலையும் ஒரே இடத்தில் வைத்து நல்லடக்கம் செய்தனர், மனைவியின் உயிரை காப்பாற்ற முடியாத விரக்தியில் கணவனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதோடு 12 வயது மகனை அனாதையாக விட்டு விட்டு சென்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது,
Tags
Next Story