காட்டு யானை தந்ததால் குத்தியதில் மாடு சாவு
யானை
கடம்பூர் அருகே உள்ள குத்தியாலத்தூர் ஊராட்சி இருட்டிப்பாளையம் திண்ணையூரை சேர்ந்தவர் பெருமாள் விவசாயி இவர் காளை மாடு ஒன்று வளர்த்து வந்தார். வழக்கமாக மேய்ச்சலுக்கு சென்று வந்த பின்னர் மாட்டை வீட்டு வாசல் கட்டி வைத்திருப்பார் நேற்று முன்தினம் இரவு மாட்டை வழக்கம் போல் வாசலில் கட்டி வைத்துவிட்டு தூங்கச் சென்றார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது உடலில் காயங்களுடன் மாடு சித்திக் கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வருவாய்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன் பெயர் கடம்பூர் வனத்துறை அதிகாரிகள் பெருமாள் வீட்டுக்கு சென்று செத்துக் கிடந்த மாட்டை பார்வையிட்டனர் அந்தப் பகுதியை ஆய்வு செய்தனர்.
அப்போது இரவு நேரத்தில் வளர்ப்பது வெளியேறிய ஆண் காட்டு யானை மாட்டை தந்ததால் குத்தியதில் இதில் மாடு உயிரிழந்து இருப்பதும் தெரிய வந்தது. கடம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் அடிக்கடி காட்டி யானைகள் வந்து விடுகின்றன தற்போது கோடை காலம் என்பதால் காற்றுக்காக பொதுமக்கள் பலர் வீட்டு வாசலில் படுத்து தூங்குகிறார்கள் அதனால் மாட்டுக்கு நேர்ந்த கதி மக்களுக்கும் ஏற்பட விடக்கூடாது எனவே வனத்துறையினர் யானைகளை வெளியேறும் வழித்தடத்தில் அகலமாக அகழி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தில் அந்த பகுதி சேர்ந்த பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.