கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு

வந்தவாசி அருகே கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது.

வந்தவாசி அருகே கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த புன்னை கிராமத்தை சேர்ந்தவர் மணி (65), விவசாயி. இவருக்கு சொந்தமான விவ சாய நிலம், பம்புசெட் கிணறு அதே கிராமத்தில் உள்ளது. நேற்று மணி தனது பசுமாட்டை நிலத்தில் மேய்த்து கொண்டிருந்தார். அப் போது மாடுகளுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், இவரது பசு மாடு அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தது. தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த பசுமாட்டை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்க முயற்சித்தார். ஆனால் முடியவில்லை. எனவே, வந்தவாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன்பேரில் நிலைய அலுவலர் பிரபாகரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒருமணி நேர போராட்டத்திற்கு பிறகு பசுமாட்டை உயிருடன் மீட்டு, உரிமையாளர் மணியிடம் ஒப்படைத்த னர்.

Tags

Next Story