ஆத்தூரில் விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு

ஆத்தூரில் விவசாய கிணற்றில்  தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு

பசுமாடு உயிருடன் மீட்பு 

ஆத்தூர் அருகே 50 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்த தீயணைப்பு துறையினர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பைத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் அருள் இவர் விவசாயம் செய்து வரும்நிலையில் அவரது விவசாய தோட்டத்தில் கால்நடைகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் இன்று மேய்ச்சலுக்காக பசு மாட்டை அவிழ்த்து விட்ட போது,

விவசாய நிலத்தில் 50 அடி ஆழ கிணற்றில் இறைத்தேடி சென்ற பசுமாடு தவறி விழுந்தது. கிணற்றில் ஏதோ சத்தம் கேட்பதை அறிந்த விவசாயி சென்று பார்க்கும் பொழுது பசுமாடு கிணற்றில் விழுந்துள்ளது தெரியவந்தது இதனை எடுத்து விவசாயி ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார் அதன் அடிப்படையில்,

ஆத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேர போராட்டத்திற்கு பின் 50 அடி ஆழமுள்ள கிணற்றிலிருந்து கயிற்றின் மூலம் பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.தொடர்ந்து பசுமாட்டை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். உயிருடன் பசுமாட்டை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு விவசாயி நன்றி தெரிவித்தார்.

Tags

Next Story