திண்டுக்கல் அருகே குளத்தின் கரையில் பள்ளம்

திண்டுக்கல் அருகே குளத்தின் கரையில் பள்ளம்

குளக்கரையில் ஏற்பட்டுள்ள பள்ளம்

திண்டுக்கல் அருகே குளத்தின் கரையில் பள்ளம் விழுந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் சிந்தலக்குண்டு கிராமம் தாமரை குளம் 280 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய குளமாக அனுமந்தராயன் கோட்டை, குட்டத்துப்பட்டி, பொன்னிமாந்துரை ஊராட்சி பகுதிகளை சார்ந்த மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விவசாயத்திற்கான நீர் ஆதாரமாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

தற்போது பெய்த மழையின் காரணமாக தாமரை குளம் நிறைந்து மறுகால் சென்றது. தற்போது தண்ணீர் முழுமையாகி இருக்கக்கூடிய நிலையில் தாமரை குளத்தின் கரையில் உள்ள சின்ன மதகு உள்ள இடத்தில் கரையில் மிகப்பெரிய துவாரம் ஏற்பட்டிருக்கிறது .

இது தண்ணீர் வேகமாக வரும் போது கரையில் முழுமையான அரிப்பு ஏற்பட்டு அருகில் உள்ள விளைநிலங்களில் பாய்ந்து பயிர்களை அழிக்கும். இவ்வாறு விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் கருது தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story