ஒசூரில் மறைந்த நண்பனின் 28வது பிறந்தநாளில் கிரிக்கெட் போட்டி

ஒசூரில் மறைந்த நண்பனின் 28வது பிறந்தநாளில் கிரிக்கெட் போட்டி

பரிசு வழங்கல்

ஒசூரில், மறைந்த நண்பனின் 28வது பிறந்தநாளில் மாற்றுத்திறானி அணிகளுக்கிடையே கிரிக்கெட் போட்டி நடத்திய பாச நண்பர்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் DX கிரிக்கெட் அணி சற்று அனைவரும் அறிந்த கிரிக்கெட் அணியாக பல வெற்றிகளை பெற்று வருகிறது.. இந்த அணியில் விளையாடி வந்த அரவிந்த் என்பவர் கடந்த 2019ம் ஆண்டு விபத்து ஒன்றில் உயிரிழந்தார்.

அரவிந்த் உயிரிழந்து 5 ஆண்டுகள் ஆன நிலையில் அவரது கிரிக்கெட் அணி மற்றும் சக நண்பர்கள் சார்பில் அரவிந்த் அவர்களின் 28 வது பிறந்தநாளான பிப்ரவரி 23அன்று மாற்று திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி தொடரை திட்டமிட்டு கர்நாடகா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களை சேர்ந்த மாற்றுத்திறானிகள் அணிக்கு ஒசூர், கலைஞர் கருணாநிதி விளையாட்டு திடலில் நேற்று முதல் போட்டிகள் நடத்தப்பட்டன

. ஒவ்வொரு அணியும் 4 போட்டிகளில் விளையாடும் விதமாக 20 ஓவர் போட்டிகள் நடத்தப்பட்டன.. இதில் பாண்டிச்சேரி அணி 4 போட்டிகளிலும் வென்று முதல் பரிசையும், தமிழகம் அணி 2 போட்டிகளிலும், கர்நாடகா அணி ஒருப்போட்டியில் மட்டும் வெற்றி பெற்றது.

ஒசூர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளில் எதிர்பாராத விதமாக உயிரிழந்த கிரிக்கெட் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளுடன் முதல்பரிசாக கோப்பை மற்றும் 30,000 ரூபாய் ரொக்கமும் கோப்பைகள் 20000,10000 ரூபாய் என முறையே 2 மற்றும் 3 ம் இடம் பிடித்த அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன நண்பன் உயிரிழந்த 5 ஆண்டுகளுக்கு பிறகும் ஓசூர் பகுதியில் முதன்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கு கிரிக்கெட் போட்டியினை நடத்திய DX கிரிக்கெட் அணி நண்பர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

Tags

Next Story