மதுக்கூடமாக மாறிய மதகு

மதுக்கூடமாக மாறிய மதகு

 முட்டவாக்கத்தில், ஏரியில் உள்ள மதகின் அருகே மதுபிரியர்கள் மதுபாட்டில்களை வீசிச்செல்வதால் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.

முட்டவாக்கத்தில், ஏரியில் உள்ள மதகின் அருகே மதுபிரியர்கள் மதுபாட்டில்களை வீசிச்செல்வதால் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.
காஞ்சிபுரம் அடுத்த, முட்டவாக்கம் கிராமத்தில், பொதுப்பணி துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரி நீரை பயன்படுத்தி, 500க்கும் மேற்பட்ட ஏக்கரில், விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். வடகிழக்கு பருவமழை பெய்தும், குறைவான அளவிலேயே ஏரியில் தண்ணீர் இருப்பு உள்ளது. இந்த தண்ணீரை பாசனத்திற்கு எடுத்து செல்வதற்காக, பிரதான சாலையோரம் மதகு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, மதுப்பிரியர்கள் மதுவை குடித்துவிட்டு பாட்டில்களை, மதகில் உடைத்து விட்டு செல்கின்றனர். இந்த மதகு திறக்கும் போது, விவசாயிகளின் கால்களில் காயம் ஏற்படுத்தும் நிலை உருவாகி உள்ளது. எனவே, பொதுப்பணி துறை ஏரிகளின் மதகு கட்டும் போது, இரும்பாலான தடுப்புடன் கூடிய கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என, விவசாயிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது."

Tags

Next Story