மீனவ கிராமத்தில் புகுந்த கொடிய விஷம் கொண்ட கண்ணாடி விரியன்
சந்திரபாடி கிராமத்தில் வீட்டிற்குள் புகுந்த கொடிய விஷம் உள்ள கண்ணாடிவிரியன் பாம்பை தரங்கம்பாடி தீயணைப்புத் துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
சந்திரபாடி கிராமத்தில் வீட்டிற்குள் புகுந்த கொடிய விஷம் உள்ள கண்ணாடிவிரியன் பாம்பை தரங்கம்பாடி தீயணைப்புத் துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சந்திரபாபு மீனவ கிராமத்தில் உள்ள சுனாமி குடியிருப்பு பகுதியில் வசிக்கும் செந்தில் வேல் என்பவரது வீட்டில் கொடிய விஷமுள்ள கண்ணாடிவிரியன் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. பாம்பை கண்டு அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்த குடும்பத்தினர் உடனடியாக தரங்கம்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் நிலைய அலுவலர் அருண்மொழி தலைமையில் விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக கண்ணாடி விரியன் பாம்பை பிடித்து வனத்துறையில் விட்டனர். வீட்டிற்குள் கண்ணாடிவிரியன் பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story