வயது முதிர்ந்தவர்களுக்கென பிரத்தியேக மருத்துவமனை இன்று தொடக்கம்

சென்னை கிண்டியில் அமைச்சர் மா சுப்பிரமணிய முன்னிலையில் பிரதமர் மோடி பிரத்யேக வயது முதிர்ந்தவர்களுக்கான மருத்துவமனையை தொடங்கி வைத்தார்.
சென்னை கிண்டியில் தேசிய முதியோர் நல மருத்துவ மையம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தலைமையில் பிரதமர் நரேந்திர மோடியால் காணொளி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது. இந்தியாவிலேயே முதல்முறையாக வயது முதிர்ந்தவர்களுக்கான பிரத்தியேக மருத்துவமனை இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு தொடங்கி பல்வேறு நிலைகளைக் கடந்து இருநூறு படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனை 276 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு இன்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் தினசரி இயங்கும் புறநோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டது. சிறப்பு சிகிச்சை பிரிவுகள், பிரத்தியேக நோய்களாக உள்ள அறிவுத்திறன் குறைபாடு, நிலை தடுமாறி விழுதல், எலும்பு தேய்மானம், சிறுநீர் கட்டுப்படுத்த முடியாமல், நாள்பட்ட வழி உள்ளிட்ட நோய்கள் கண்டறிதல் உணர்வாழ்வு சிகிச்சைகள் உள்ளிட்டவை 24 மணி நேரமும் இங்கு அளிக்கப்பட உள்ளன. மேலும் இங்கு ஒரு கோடி மதிப்பிலான அவசர அவசிய மருந்துகள் கையிருப்பு உள்ளன. இந்த மருத்துவமனையில் பிரத்தியேக நூலகமும் கேரம்போர்டு, செஸ்பலகைகள் மற்றும் பல்லாங்குழிகள் போன்ற தமிழர் விளையாட்டுகளும் அமைக்கப்பட்டு இருக்கின்றது.

Tags

Next Story