பில்லூர் அணையை போர்க்கால அடிப்படையில் தூர்வார கோரிக்கை

பில்லூர் அணையை போர்க்கால அடிப்படையில் தூர்வார கோரிக்கை

ஈஸ்வரன் எம்எல்ஏ 

கோவை பில்லூர் அணை நீர்மட்டம் குறைந்திருப்பதால், இந்த நேரத்தில் போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும் என ஈஸ்வரன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்திற்கு குடிதண்ணீர் ஆதாரமாக இருக்கின்ற பில்லூர் அணையில் 43 அடி தண்ணீர் மட்டும் இருப்பதாக அறிகிறோம். இதில் 33 அடி மண் நிரம்பி இருக்கிறது என்பதும் செய்தி. குடி தண்ணீருக்கான மாற்று ஏற்பாடுகளை விரைவாக அரசு செய்ய வேண்டுமென்று பொதுமக்கள் பல இடங்களில் காலி குடங்களுடன் போராட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

விரைவான நடவடிக்கைகள் தேவைப்படுகிறது. அதே சமயத்தில் இந்த சூழ்நிலைகளை பயன்படுத்தி உடனடியாக பில்லூர் அணையை தூர்வாரி நிரம்பி இருக்கின்ற மண்ணை அகற்ற வேண்டும். இதன் மூலம் மழை பெய்யும் போது அணையின் கொள்ளவை கணிசமாக உயர்த்த முடியும்.

குடி தண்ணீருக்கான மாற்று ஏற்பாடு எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் அணையை தூர்வாருகின்ற பணி. நீர்வளத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு தூர்வாரும் பணியை துரித படுத்த வேண்டும். எம்எல்ஏ ஈஸ்வரன் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்

Tags

Next Story