விருந்துநகரில் பாஜக கண்ட ஆர்பாட்டம்

விருந்துநகரில் பாஜக கண்ட ஆர்பாட்டம்
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊழலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊழலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
விருதுநகர் தேசபந்து மைதானத்தில் பாஜக சார்பில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊழலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் மற்றும் பாஜகவின் கன்னியாகுமரி கோட்ட பொறுப்பாளர் பொன் பாலகணபதி மற்றும் பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊழலை கண்டித்து பாஜகவினர் கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். மேலும் ஆர்பாட்டத்தில் பேசிய பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திரைப்படங்களில் நயன்தாராவுடன் 4 படங்களில் நடித்ததை தாண்டி உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆவதற்கு என்ன தகுதி உள்ளது என்றார். மேலும் பேசிய பேராசிரியர் சீனிவாசன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாத்தா முதலமைச்சர் மற்றும் அவருடைய தந்தை முதலமைச்சர் ஆகையால் அடுத்து உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் அதை தாண்டி உதயநிதி ஸ்டாலினுக்கு என்ன தகுதி உள்ளது என கேள்வி எழுப்பிய பேராசிரியர் சீனிவாசன் நயன்தாராவுடன் 4 படங்களில் நடித்தது தான் தகுதி என்றால் அதற்கு நடிகை நயன்தாராவையே முதலமைச்சராக ஆக்கி விடலாம் என்றார்.

Tags

Next Story