திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் !

X
ஆர்ப்பாட்டம்
போதைப் பொருளை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகரில் பாஜக கிழக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் போதைப் பொருளை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் போதைப் பொருள் குறித்து பாட்டு பாடிய நிர்வாகி- 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு. தற்போது தமிழகம் முழுவதும் பரவி உள்ள போதைப் பழக்கத்தால் பள்ளி, மற்றும். கல்லூரி மாணவ, மாணவிகள் சீரழிந்து வருவதாகவும், இந்த போதைப் பழக்கத்துக்கு அடிமையாக உள்ளவர்கள் சிறுமிகளை பாலியல் தொல்லை செய்து அவர்களை கொலை செய்யும் அளவுக்கு திமுக ஆட்சியில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும், அதை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து இன்று விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே, விருதுநகர் கிழக்கு மாவட்டம் இளைஞரணி சார்பில் கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் , மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகரன் முன்னிலையில் தமிழ்நாட்டை ஆளும் திமுக ஆட்சியில் போதைப் பொருள்கள் பழக்கம் அதிகமாகி உள்ளதை கண்டித்து 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் நடுவே போதைப்பொருள் குறித்து பாட்டு பாடிய பாஜக நிர்வாகி அங்கு இருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு தொடர்பு பிரிவு மாவட்டதலைவர் ராஜகோபால் , பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் காமாட்சி மற்றும் இளைஞரணியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story
