எடப்பாடி அருகே வீட்டி தனியாக இருந்த மாற்றுத்திறனாளி கொலை

எடப்பாடி அருகே வீட்டி தனியாக இருந்த மாற்றுத்திறனாளி கொலை

கொலை செய்யப்பட்டவர்

இருப்பாளி ஊராட்சிக்குட்பட்ட குறுக்குப்பட்டி பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளி கொலை செய்யப்பட்டார்.

எடப்பாடி அருகே வீட்டி தனியாக உறங்கிக் கொண்டிருந்த மாற்றுத்திறனாளி (வாய் பேசாத ஊமை) பெண்ணை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு தப்பி ஓடிய இச்சம்பவம் குறித்து பூலாம்பட்டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் இருப்பாளி ஊராட்சிக்குட்பட்ட குறுக்குப்பட்டி பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளி (வாய் பேசாத ஊமை) பெண் பெருமாயி (50) இவரது கணவர் மாணிக்கம் இவரை இழந்து தனியாக வசித்து வருகிறார். இவர் வழக்கம்போல் நேற்று இரவு வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போத மர்ம நபர்கள் யோரோ வீட்டு வாசலுக்கு இழுத்து வந்து பெருமாயியை தலையின் மீது கல்லை தூக்கி போட்டு கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இத்தகவலறிந்த மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜா, எடப்பாடி காவல்துறை ஆய்வாளர் சந்திரலேகா, பூலாம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தலிங்கம் ஆகியோர் மோப்ப நாய் லில்லியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேதத்தைக் கைப்பற்றி பரிசோதனைக்காக சேலம அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மோப்ப நாய் லில்லி ஒரு கிலோமீட்டர் தொலைவிற்க்கு சென்று,ஒரு வீட்டின் அருகே நின்று விட்டு மீண்டும் திரும்பியது. மேலும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் பெருமாயிக்கு பிறந்த மகளை திருமணம் செய்து கொடுத்துள்ளதாகவும் கணவர் இறந்து விட்டதால்,

வீட்டில் தனியாக குடியிருந்து வருவதாகவும் கூறப்பட்டு வருகின்ற இந்நிலையில்.. தனது வீட்டின் முன்பு தனியாக உறங்கிக் கொண்டிருந்த மாற்றுத்திறனாளி பெண்ணின் தலையின் மீது மர்ம நபர்கள் கல்லைப் போட்டு கொலை செய்து விட்டு தப்பி ஓடிய இச்சம்பவம் பூலாம்பட்டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கொலைச்சம்பவத்தால் குறுக்குப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது ..

Tags

Read MoreRead Less
Next Story