அவனியாபுரத்தில் இடியும் நிலையில் உள்ள அங்கன்வாடி மையம்

அவனியாபுரத்தில் இடியும் நிலையில் உள்ள அங்கன்வாடி மையம்

அங்கன்வாடி மையம்

அவனியாபுரத்தில் இடியும் நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தை சரி செய்து தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை
20ஆண்டுகளாக முன்பாக கட்டப்பட்ட இலவச கழிப்பறை அன்று முதல் இன்று வரை திறக்கப்படாமலும் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயிலும் அங்கன்வாடி மையம் இடியும் தருவாயிலும் இப்பகுதிக்கு அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியும் இடியும் தருவாயில் உள்ளதால் உடனடியாக சரி செய்து தருமாறு கோரிக்கை. மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட அவனியாபுரம் தந்தை பெரியார் நகர் பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட இலவச கழிப்பறை இன்று வரை திறக்கப்படாததால் பொதுமக்கள் அவதி இதுபோன்று இப்பகுதிகளில் சாக்கடை வசதி குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளும் இல்லை என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு. 1974 ஆம் ஆண்டு இப்பகுதி மக்களுக்காக கட்டப்பட்ட விடியும் தருவாய்க்கு வந்த நிலையிலும் தண்ணீர் மட்டும் இப்பகுதி மக்களுக்கு இல்லை இது போன்று பல பிரச்சனைகளுடன் வாழ்ந்து வரும் இப்பகுதி மக்கள் அரசிடம் கோரிக்கை வைத்தோம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் செய்யாத நிலை இருந்து வருகிறது என வேதனை இப்பகுதியில் குப்பை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் தூர் வருவதற்கு கூட துப்புரவு பணியாளர்கள் வருவதில்லை என குற்றச்சாட்டு இப்பகுதியில் செயல்பட்டு வரும் இடியும் தருவாயில் இயங்கி வரும் அங்கன்வாடி மையம் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த அங்கன்வாடி மையத்தில் பயின்று வருவதால் அங்கன்வாடி நுழைவாயில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் கூட சரி செய்யாமல் நோய் தொற்றும் பரவும் அபாய நிலையில் உள்ளதாகவும் இனியும் தருவாயில் உள்ள இந்த அங்கன்வாடியை புதுப்பிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது இப்பகுதியில் உள்ள சுடுகாட்டுகளில் சமூகவிரோதிகளில் கூடாரமாகவும் இப்பகுதி மக்கள் தாங்கள் வழக்கும் கால்நடைகளை இப்பகுதியில் கத்தி அசுத்தம் செய்து வருவதாகவும் கால்நடைகளின் கழிவுகளை சாலை ஓரங்களில் கொட்டி விட்டு செல்வதாகவும் இதனால் இப்பகுதிக்குள் பயணிக்க முடியாமல் இரண்டு கிலோமீட்டர் சுற்றும் உள்ள மற்றொரு பகுதி வாயிலாக வர வேண்டிய நிலை உள்ளதாகவும் ஆடைகளின் கழிவுகள் மற்றும் சாக்கடைகள் கருவேல மரங்களால் சூழப்பட்டுள்ள சுடுகாடுகளில் சீரமைக்க வேண்டும் எனவும் இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும் உடனடியாக இப்பகுதிகளுக்கு அடிப்படை வசதிகளும் சாலை வசதி சாக்கடை வசதிகளை உடனடியாக செய்து தருமாறு கோரிக்கைகள் எழுந்துள்ளதுஇந்த அவனியாபுரம் பகுதி பேரூராட்சியாக இருந்தபோது கட்டப்பட்ட அனைத்து அரசு கட்டிடங்கள் அங்கன்வாடி கட்டிடங்கள் இப்பகுதி மக்களுக்காக கொண்டுவரப்பட்ட இலவச கழிப்பறை தற்போது இந்த பகுதி மாநகராட்சி ஆக மாறி பல ஆண்டுகள் ஆகியும் இன்று வரை எந்த வசதியும் செய்து தராதது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story