பள்ளி வளாகத்தில் பாழடைந்த உரக்கிடங்கு

பள்ளி வளாகத்தில் பாழடைந்த உரக்கிடங்கு

திருவள்ளூர் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட உரக்கிடங்கு பாழடைந்து உள்ளது.


திருவள்ளூர் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட உரக்கிடங்கு பாழடைந்து உள்ளது.
திருவாலங்காடு ஒன்றியம், தொழுதாவூர் ஊராட்சி பள்ளத் தெருவில், அரசு நடுநிலைப் பள்ளி, வி.ஏ.ஓ., அலுவலகம், அங்கன்வாடி மையம் ஒருங்கிணைந்த வளாகத்தில் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில், 20 ஆண்டுகளுக்கு முன் இயற்கை உரம் மற்றும் மண்புழு தயாரிக்கும் கூடம் கட்டப்பட்டது. கடந்த, 10 ஆண்டுகளாக பயன்பாடின்றி பாழடைந்து உள்ளது. இந்த கட்டடம் அருகே பள்ளி மாணவர்களுக்கு கழிப்பறை மற்றும் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் இந்த கூடம் இருக்கும் பகுதியில் விளையாடி வருகின்றனர். மேலும் கட்டடம் பழுதடைந்த நிலையில் உள்ளதால், உரக்கூடம் இடிந்து விழுந்தால் மாணவர்கள் காயமடையும் சூழ்நிலை உள்ளது. எனவே, பள்ளி மாணவர்களின் நலன் கருதி உரக்கிடங்கு கூடத்தை அகற்ற வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் எதிர்ப்பார்க்கின்றனர்.

Tags

Next Story