பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த நபருக்கு சிறை !

X
கைது
நத்தம் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையை திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சோந்தவா் டேவிட் சிவஞானம் (54). இவா், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியிலுள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தாா்.இதனிடையே கடந்த 2021-22 கல்வி ஆண்டில், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக டேவிட் சிவஞானம் மீது புகாா் எழுந்தது. இதையடுத்து, நத்தம் போலீஸாா், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா். இதுகுறித்த வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட ஆசிரியா் டேவிட் சிவஞானத்துக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.19ஆயிரம் அபராதமும் விதித்து, நீதிபதி கே.கருணாநிதி செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்தாா்.
Next Story
