உத்தமபாளையத்தில் ரேடியோ சத்தத்தை குறைக்க சொன்னதால் தகராறு...!

X
காவல் நிலையம்
உத்தமபாளையத்தில் ரேடியோ சத்தத்தை குறைக்க சொன்னதால் தகராறு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
உத்தமபாளையம் அம்மாபட்டி விலக்கில் குடியிருப்பவர் செல்லம்மாள். பக்கத்து வீட்டில் குடியிருக்கும் தங்கை மகன் ராஜா என்பவர் இரவு ரேடியோ சத்தத்தை மிகவும் அதிகமாக வைத்து கேட்டுக் கொண்டிருந்தார்.
செல்லம்மாள் தனது பேரன் பரீட்சைக்கு படிப்பதால் சத்தத்தை குறைக்க ராஜாவிடம் கூறியதால் ஏற்பட்ட தகராறில் ராஜா உடற்பயிற்சி செய்யும் கர்லாக்கட்டையை கொண்டு செல்லம்மாளை தாக்கினார். புகாரின் பேரில் பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Tags
Next Story
