மாணவர்களுக்கு விளையாட்டு பொருட்களை வழங்கிய திமுக பிரமுகர்

மாணவர்களுக்கு விளையாட்டு பொருட்களை வழங்கிய திமுக பிரமுகர்

விளையாட்டு பொருட்களை வழங்கிய திமுக பிரமுகர்


துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு திமுக துணைத்தலைவர் விளையாட்டு பொருட்களை வழங்கினார்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே 11வது வார்டுக்கு உட்பட்ட பச்சமலை மற்றும் நடுமலை எஸ்டேட் பகுதியில் உள்ள நகராட்சி துவக்கப்பள்ளியில் சுமார் 50 குழந்தைகள் படித்து வருகின்றனர்.தமிழ்நாடு விளையாட்டு துறை மேம்பாட்டு அமைச்சர் ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு வால்பாறை நகர செயலாளர் சுதாகர் தலைமையில் 11வது வார்டு உறுப்பினரும் நகர மன்ற துணைத் தலைவருமான செந்தில்குமார் பள்ளி குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் கென்னடி மற்றும் கட்சியின் நிர்வாகிகள் சுப்பையா, சுப்பரமணி,முத்துலட்சுமி, கார்த்தி,குள்ளி என்கிற சதீஷ் அமுதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story