மதுரை மேலூரில் நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

மதுரை மேலூரில் நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

மதுரை மேலூரில் நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டி பந்தயம் - அமைச்சர் மூர்த்தி துவக்கி வைப்பு
முதல்வரின் 71-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மேலூரில் நடைபெற்ற மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் 90 ஜோடி இரட்டைமாட்டு வண்டிகள் கலந்து கொண்டனர். முதல் பரிசாக இரண்டு லட்சம் ரூபாய் பரிசு வென்ற காளைகள், பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைப்பு . மதுரை மாவட்டம் மேலூரில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் 71-வது பிறந்த தினத்தையும் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மார்க்கெட் ராஜேந்திரன் இணைந்து நடத்தப்படும் மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் இன்று நடைபெற்றது. முதல் பரிசாக இரண்டு லட்சம் ரூபாய் உள்ளிட்ட 9 லட்சம் ரூபாய்க்கு மேலான மதிப்பு மிக்க பரிசு தொகையுடன் மற்றும் வெற்றிக்கோப்பைகளுடன் நடத்தப்பட்ட இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் பெரிய மாடு பிரிவில் 13 - ஜோடி காளைகளும் நடுமாடு பிரிவில் 21 ஜோடி சின்ன மாடு பிரிவில் 56- ஜோடி காளைகளும், என மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. இதில் பெரிய மாடு பிரிவில் முதல் பரிசாக இரண்டு லட்சம் ரூபாய் மற்றும் வெற்றிகோப்பை உள்ளிட்ட மொத்த பரிசுத்தொகை 9 லட்சம் ரூபாய்க்கு மேல் கொண்ட இப்பந்தயத்தினை மேலூரில் இருந்து சிவகங்கை செல்லும் சாலையில் 9 கிலோமீட்டர் தொலைவிற்கு சாலையின் இரு புறங்களிலும் மாட்டு வண்டி பந்தய ரசிகர்கள் லட்சக்கணக்கானோர் கண்டு ரசித்தனர். இந்த விழாவிற்கான ஏற்பாட்டினை மேலூர் A.R ரேக்ளா பாய்ஸ் பேங்க் ரோடு நண்பர்கள் செய்திருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story