கொங்குநாடு பதின்ம மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் கனவுப்பயண நிகழ்வு

வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பதின்ம மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் கனவுப்பயண நிகழ்வு

மாணவர்களின் கல்வி மேம்பாடு, தனித்தன்மை வெளிப்பாடு, தன்னார்வ ஈடுபாடு, வேலைவாய்ப்பில் கவனம், தொழில் முனைவு, சமூக ஈடேற்றம் போன்றவற்றை மேம்படுத்தத் துறை சார்ந்த பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இப்பயணத்தில் மாணவர்களின் உள்ளத்தின் ஊற்றாக விளங்கும் நாமக்கல் மாவட்ட நிர்வாகத்துறைகளான மருத்துவத்துறை சார்ந்து அரசு மருத்துவக்கல்லூரி, நீதித்துறை சார்ந்து மாவட்ட நீதிமன்றம், காவல்துறை சார்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், வருவாய்த்துறை சார்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நாமக்கல் ஆகிய இடங்களைப் பார்வையிட்டதுடன் அலுவலர்களிடமும் கலந்துரையாடினர். பின்பு கருத்தரங்குகளிலும் பங்கேற்றனர்.

இக்கனவு பயணத்தினை நிர்வாக உறுப்பினர்கள், முதல்வர் மற்றும் ஆசிரியர் ஏற்பாடு செய்தனர்.

Tags

Next Story