செல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயற்சித்த போதை ஆசாமி

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே போதை ஆசாமி செல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயற்சித்ததால் 5 மணி நேரம் பரபரப்பு

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே போதை ஆசாமி செல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயற்சித்ததால் 5 மணி நேரம் பரபரப்பு.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் விருதுநகர் ஆர் ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த காளிராஜ் என்ற 27 வயது இளைஞர் தனது மனைவியை மற்றொருவர் கூட்டிச் சென்றதாக கூறியும் தனது மனைவியை மீட்டு தர கோரி புகார் அளிக்க சென்ற பொழுது சார்பு ஆய்வாளர் சுந்தரமகாலிங்கம் புகார் எழுதிக் கொடு நடவடிக்கை எடுப்போம் என கூறியுள்ளார் காளிராஜ் மதுபோதையில் இருந்ததாக ஓரமாக உட்காரு விசாரிப்போம் என கூறிய பொழுது வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் அப்போது சார்பு ஆய்வாளர் அமைதியாக இருக்குமாறு எச்சரித்துள்ளார்.

உடனடியாக வெளியே வந்த காளிராஜ் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு ஒரு மணி அளவில் செல்போன் டவர் மேல் ஏறி மிரட்டல் விடுத்த காளிராஜ் ராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ப்ரீத்தி ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் கண்ணா தீயணைப்பு த்துறை அதிகாரிகள் கீழே இறங்கி வருமாறு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் அப்பொழுது போதை ஆசாமி தனது மனைவியை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார் உடனடியாக காவல்துறை ராஜபாளையம் அழகாபுரி அருகே தொட்டியபட்டி பகுதியில் இருந்த மனைவி ரேவதியை அழைத்து வந்து கணவனை கீழ இறங்க கூறிய பொழுது வாக்குவாதத்தில் ஈடுபட்டு கீழே இறங்குவதும் மேலே ஏறுவதுமாக இருந்த காளிராஜ் 5 மணி நேரம் தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பலன் அளிக்காத நிலையில் சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் விசுவநாதன் நேரில் வந்து போதை ஆசாமி காளிராஜனுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு கீழே இறங்கி வருமாறு அறிவுறுத்தினார்.

அதற்கும் செவி சாய்க்காத நிலையில் தண்ணீர் வேண்டும் என கேட்ட பொழுது மனைவி தண்ணீர் கொடுப்பதற்காக கொடுத்தபோது ஆய்வாளர் ரமேஷ் கண்ணன் சாதகமாக காலை பிடித்து கீழே இழுத்து காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல முயற்சி செய்தார் அப்பொழுது நான் காவல் நிலையத்துக்கு வரமாட்டேன் என்னை வீட்டுக்கு அனுப்புங்கள் என்று கூறி காவல் வாகனத்தில் ஏறாமலும் முரண்டு பிடித்தார் போலீசார் அவரை ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்த பொழுது சினிமா நடிகரை பார்ப்பதற்கு கூட்டம் கூடுவது போல் கூட்டம் கூடியது இதனால் போக்குவரத்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

Tags

Next Story