குடிபோதையில் உணவகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்!

குடிபோதையில் உணவகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்!

குற்றவாளி

குடிபோதையில் உணவகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய இளைஞரை விசராணை நடத்தி வருகின்றனர்.அவருடன் வந்த மற்ற 2 வாலிபர்களையும் போலீசார் தேடிவருகிறார்கள்.
கோவை:சேரன் மாநகர் வினோபாஜி நகரில் உள்ள ஒரு உணவகம் அருகே பெட்டிக்கடை உள்ளது.நேற்று சில வாலிபர்கள் இந்த பெட்டிக்கடைக்கு வந்து சிகரெட் கேட்டு பெற்று கொண்டனர்.சிகரெட்டுக்கான பணத்தை கடைக்காரர் கேட்டபோது தகராறு செய்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.பின்னர் அங்கிருந்து சென்ற வாலிபர்கள் இரவு 9.40 மணி அளவில் மீண்டும் அந்த பெட்டிக்கடைக்கு வந்து பெட்ரோல் குண்டுவீசி உள்ளனர். ஆனால் தவறுதலாக பெட்ரோல் குண்டு அருகே இருந்த ஹோட்டல் அருகில் விழுந்து வெடித்ததில் உணவகத்தில் லேசான தீ விபத்து ஏற்பட்ட நிலையில் அது உடனடியாக அணைக்கபட்டது.இந்த சம்பத்தால் அப்பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.போலீசார் விசாரணை மேற்கொண்டு வினோபாஜி நகரை சேர்ந்த வரதராஜன்(25) என்பவரை பிடித்தனர்.குடிபோதையில் இருந்த அவர் சிகரெட் கேட்டு தகராறு செய்து விட்டு தனது நண்பர்களுடன் வந்து பெட்ரோல் குண்டு வீசி சென்று இருப்பது தெரியவந்துள்ளது.வரதராஜனை காவல் நிலையம் அழைத்து சென்று விசராணை நடத்தி வருகின்றனர்.அவருடன் வந்த மற்ற 2 வாலிபர்களையும் போலீசார் தேடிவருகிறார்கள்.இரவு நேரத்தில் நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story