இரு சமூக மக்களிடையே கோஷ்டி மோதல்
பைல் படம்
தொட்டணம் பட்டியில் இரு சமூக மக்களிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை களைந்து நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் உண்மை அறியும் குழுவாகச் சென்றது.
திண்டுக்கல் மாவட்டம், வேடச சந்தூர் வட்டம் தொட்டணம் பட்டியில் இரு சமூக மக்களிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை களைந்து அங்கு நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் தமிழக மக்கள் முன்னணி சார்பில் உண்மை அறியும் குழுவாகச் சென்றது. இந்த குழுபாதிக்கப்பட்டுள்ள மக்களையும் எரியோடு காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் ஆகியோரையும் சந்தித்தது. இது குறித்து குழுவினர் கூறியதாவது: பாதிக்கப்பட்ட இரு தரப்புமக்களில் ஒரு தரப்பு மக்களை சந்திக்க முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறோம். சந்திப்பதாக உறுதியளித்திருந்த தெருத் தலைவர் வேறு சொந்த பணிக்காக வெளியூர் சென்றிருப்பதால் தாமதம் ஏற்பட்டுள்ளது.இன்று விசாரணை அதிகாரியான துணை காவல் கண்காணிப்பாளரை குழு சந்திக்கும் என்றனர்.
Next Story