துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் விவசாயி காயம் ஒருவர் கைது
போலீசார் கைது
மஞ்சள் தோட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விவசாயி துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் காயமடைந்தார். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி பறிமுதல்.
அரூர் அருகே மஞ்சள் தோட்டத்தில் பாது காப்பு பணியில் ஈடுபட்டி ருந்த விவசாயி துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் காயமடைந்தார். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து நாட்டுத்துப்பாக்கி கைப்பற்றப்பட்டது. தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா குண்டல்மடுவு பகுதியைச் சேர்ந்தவர் ரவி இவருக்கு வயது 25 விவசாயியான இவர், அரூர் அருகே கோரையாறில் தனது தாத்தா குப்புசாமியுடன் தங்கி உள்ளார். குப்புசாமி நிலத்தில் மஞ்சள் அறுவடை செய்து வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்று இரவு ரவி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். நள்ளிரவில் நாட்டுத்துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு, திடுக்கிட்டு எழுந்த ரவி சுற்றும் முற்றும் பார்த்துள்ளார். அப்போது, அவரது வலது தோள்பட்டையில் குண்டு பாய்ந்தது. இதில், படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள், மீட்டு அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதில், கோரையாரைச் சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவர் வன விலங்குகளை வேட்டையாட சென்ற இடத்தில் துப்பாக்கியால் சுட்ட போது, ரவி குறுக்கே வந்ததில் காயமடைந்தது தெரிய வந்தது. இதயைடுத்து, ராஜ மாணிக்கத்தை போலீசார் கைது செய்தனர். அவரிட மிருந்து நாட்டுத் துப்பாக்கி கைப்பற்றப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story