கெங்கவல்லி அருகே விஷம் குடித்த விவசாயி பலி !

கெங்கவல்லி அருகே விஷம் குடித்த விவசாயி பலி !

 போலீசார்

கெங்கவல்லி அருகே மது குடித்து விட்டு வந்ததால் மனைவி கண்டித்ததால் மனம் உடைந்த கணவர் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து உயிரிழந்தார்.
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே, ஓதியத்தூர் கிழக்கு காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் நடராஜன் (35), விவசாயியான இவரது மனைவி சுபா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நடராஜனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதுதொடர்பாக அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 28ம் தேதி, அரிசி வாங்குவதற்காக கொடுத்த பணத்தில் மது குடித்து விட்டு வந்ததால் மனைவி கண்டித்துள்ளார். இதனால், மனம் உடைந்த நடராஜன் தோட்டத்தில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்துக் குடித்து விட்டார். இதில், மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி நேற்றிரவு நடராஜன் உயிரிழந்தார். இதுகுறித்த கெங்கவல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story