புகார் அளிக்க சென்ற விவசாயி கொலை

புகார் அளிக்க சென்ற விவசாயி கொலை

விவசாயி கொலை

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே புகார் கொடுப்பதற்காக காவல் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்த விவசாயி ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொம்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே ஆழிவாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (50). விவசாயியான இவர் இறால் பண்ணையும் நடத்தி வந்தார். இவரது உறவினரான அய்யம்பேட்டை அருகேயுள்ள பசுபதிகோவிலைச் சேர்ந்த செந்திலுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே ஒரு வாரத்துக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. இது குறித்து அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் செந்தில் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, செந்திலை ஜெயக்குமார், இவரது நண்பரான காட்டுக்குறிச்சியைச் சேர்ந்த அன்பரசு மகன் பிரவீன் (28) அழைத்துக் கொண்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு புகார் கொடுப்பதற்காக திங்கள்கிழமை சென்றனர்.

அங்கு அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்யுமாறு கூறினார். இதையடுத்து, ஜெயக்குமார், செந்தில், பிரவீன் ஆகியோர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து அய்யம்பேட்டை காவல் நிலையத்துக்கு திங்கள்கிழமை மாலை சென்று கொண்டிருந்தனர். பசுபதிகோவில் பகுதிக்குச் சென்றபோது சிலர் காரை வழிமறித்து ஜெயக்குமார், செந்தில், பிரவீன் ஆகியோரை ஆயுதங்களால் தாக்கினர்.

இதனால், பலத்த காயமடைந்த ஜெயக்குமார், பிரவீன் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் ஜெயக்குமார் உயிரிழந்தார். பிரவீன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அய்யம்பேட்டை காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story