மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை
ஆயுள் தண்டனை
தர்மபுரி மாவட்டம் ,பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த கணவன் மனைவி காதல் திருமணமாகி 17 வருடங்கள் ஆகிறது. கணவன் மனைவி இருவரும் திருமணம் ஆன ஆறு மாதத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இவர்கள் பிரியும் போது மனைவி மூன்று மாத கர்ப்பமாக இருந்துள்ளார். குழந்தை பிறந்த பின்னர் மனைவிக்கு வேறு ஒரு நபருடன் இரண்டாம் திருமணம் நடந்துள்ளது. குழந்தை தனது பாட்டி வீட்டிலேயே வளர்ந்துள்ளது. கடந்த 2018 ஆம் வருடம் 12 வது மாதம் 11-ம் வகுப்பு படித்து வந்த சிறுமியை கூலி தொழிலாளியான தந்தையே பருத்திக்காட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் பொம்மிடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போக்சோ வழக்கு பதிவு செய்த பொம்மிடி காவலர்கள் கூலி தொழிலாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு தர்மபுரி போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது தந்தை குற்றம் செய்தது உறுதியானதையடுத்து தந்தைக்கு ஆயுள் தண்டனையும் 30 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சையத் பக்ரதுல்லா தீர்ப்பு வழங்கினார்.