அரசு பெண் ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழப்பு

அரசு  பெண் ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழப்பு

ராஜலட்சுமி என்ற ராசாத்தி

சங்கரன்கோவிலில் அரசு பெண் ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழப்பு.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த தென்காசி வடக்கு மாவட்ட திமுக பிரதிநிதி முத்துக்குமார் என்பவரின் மனைவி ராஜலட்சுமி என்ற ராசாத்தி . இவர் சங்கரன்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் ராஜலட்சுமி என்ற ராசாத்தி வீட்டில் இருக்கும் இன்வெர்ட்டர் பேட்டரிக்கு தண்ணீர் ஊற்றும் போது எதிர்பாராத விதமாக மின்கசிவு ஏற்பட்டதில் மின்சாரம் தாக்கியதில் ராசாத்தி பரிதாபமாக சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இது குறித்து சங்கரன்கோவில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ராசாத்தி உடலை பிரேத பரிசோதனைக்கு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story