வாக்கு எண்ணிக்கை மைய பணியில் இருந்த பெண் கிராம உதவியாளர் உயிரிழப்பு
ராஜேஸ்வரி
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் இருப்பு அறையில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் காவல் துறை வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பணி புரிந்து வருகின்றனர்.
இதில் வெண்மான்கொண்டான் கிழக்கு வருவாய் கிராமத்தில் கிராம உதவியாளராக இருக்கும் ராஜேஸ்வரி என்பவரும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணியாற்றினார் பணியின் போது நேற்று இரவு உடல்நிலை பாதிக்கப்பட்ட ராஜேஸ்வரியை உடன் பணியாற்றிய அலுவலர்கள் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி உயிரிழந்தார்.
இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேஸ்வரி உடலை மீட்டு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.பணியில் இருந்த போதே ராஜேஸ்வரி உயிரிழந்த சம்பவம் சக ஊழியர்களையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.