குட்கா விற்பனை செய்த வியாபாரிக்கு ரூபாய் 25 ஆயிரம் அபராதம்

குட்கா விற்பனை செய்த வியாபாரிக்கு ரூபாய் 25 ஆயிரம் அபராதம்

அபராதம்

அம்பலகாலை பகுதியில் குட்கா விற்பனை செய்த வியாபாரிக்கு ரூபாய் 25 ஆயிரம் அபராதம் விதித்து கடைக்கு சீல் வைத்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள்
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே மாங்கோடு அம்பலக்காலை பகுதியை சேர்ந்தவர் மணியன்.மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் அங்கு வரும் நபர்களுக்கு குட்கா விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து தனிப்பிரிவு காவலர் ராஜேஷ் பாபு தலைமையிலான போலீசார் சமீபத்தில் அங்கு சென்று குட்கா விற்பனை செய்த மணியனை கையும் களவுமாக பிடித்தனர். மேல்கட்ட நடவடிக்கையாக உணவு பாதுகாப்பு அலுவலர் கிளாஸ்டின் தலைமையிலான அதிகாரிகள் இன்று மணியனின் கடைக்கு சென்றனர்.பின்னர் அந்த கடைக்கு கடைக்கு சீல் வைத்த தோடு ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்தனர். இந்த அபராதத்தை 15 நாட் களுக்கு பிறகு அரசு கருவூ லத்தில் கட்ட வேண்டும்.பின்னர் அருமனை காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு போலீசார் வழியாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உத்தரவுடன் கடையை மீண்டும் திறக்கலாம் என மணியனிடம் தெரிவித்தனர்.மீண்டும் மணியன் குட்கா விற்பனை செய் தால் ரூ.50 ஆயிரம் அபராதம், 30 நாள் கடைக்கு சீல் வைக்கப்படும். தொடர்ந்துகுட்கா விற்பனை செய் தால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம், நிரந்தரமாக கடைக்கு சீல் வைக்கப்ப டும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். அருமனை எஸ்எஸ்ஐ ஜெபின் ராஜ் மற்றும் அருமனை காவலர் கள், உணவுத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story