நாகர்கோவில் துணிக்கடைக்கு ரூ 50 ஆயிரம் அபராதம்

நாகர்கோவில் துணிக்கடைக்கு ரூ 50 ஆயிரம் அபராதம்
பைல் படம்
நாகர்கோவில் மாநகராட்சியில் கழிவறை கழிவு நீரை பொது ஓடையில் திறந்துவிட்ட துணிக்கடை உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் உள்ள சில கடைகளில் அரசு விதிமுறைகளை மீறி, கழிவறைகளில் இருந்து மனித கழிவுகள் பொது ஓடையில் விடப்படுவதாக மாநகராட்சி அலுவலகத்தில் புகார் வந்தது. புகாரின் அடிப்படையில் மாநகர சுகாதார ஆய்வாளர் சத்யராஜ் மற்றும் அதிகாரிகள் நேற்று கோட்டார், செட்டிகுளம், பீச் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டல்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கோட்டார் செம்மங்குடி சாலையில் உள்ள ஒரு துணிக்கடையில் விதிமுறைகளுக்கு மாறாக கழிவறை கழிவுகள் பொது ஓடையில் செல்லும்படி அமைக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து அந்த துணிக்கடை உரிமையாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

Tags

Next Story