அன்னை சத்யா நகரில் தேங்காய் குடோனில் தீ விபத்து

காங்கேயம் இல்லியம் புதூர் சாலையில் உள்ள அன்னை சத்யா நகரில் தனியாருக்கு சொந்தமான தேங்காய் பருப்பு குடோன் தீ விபத்து ஏற்பட்டது இந்த தீ விபத்தில் பல லட்சக்கணக்கான தேங்காய் பருப்புகள் எரிந்து சேதமாகியது சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்த காங்கேயம் தீயணைப்பு துறையினர்.
காங்கயம் அருகே உள்ள இல்லியம்புதூர் சாலை அன்னை சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய செந்தில்குமார் வயது 45. இவர் அதே பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று துவங்கி தேங்காய் பருப்பு குடோன் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் பணியை முடித்து விட்டு இரவில் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. நேற்று காலை குடோனில் இருந்து மளமளவென புகை வந்துள்ளது. இதையடுத்து உள்ளே சென்று பார்த்த போது தேங்காய் பருப்பு மூட்டைகள் தீப்பற்றி எரியத் தொடங்கியது. உடனே அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சித்தனர். இதனை அடுத்து காங்கேயம் தீயனைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்பு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணிகண்டன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மதியம் வரை சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் குடோனில் வைக்கப்பட்டிருந்த 4 ஆயிரம் மூட்டையில் பெரும்பாலும் தீயில் கருகி நாசமாயின. மேலும் இதன் மதிப்பு பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதனை அடுத்து காங்கேயம் போலீசார் வழக்குபதிவு செய்து தீ விபத்திற்கான காரணங்களை ஆராய்ந்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story